Sunday, 22 March 2015

மகிழ்ச்சியாக இரு!

மார்ச் 20 ம் தேதியை அதாவது இன்றைய தினத்தை உலக மகிழ்ச்சி நாளாக நா அறிவித்திருக்கிறது.
20 March. International Day of Happiness (UN)
உலகில் வாழும் தனி மனிதனின் அடிப்படை நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வது
அது போல நமது பொதுவாழ்வின் தத்துவம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வேண்டும் என்பது என ஐநா அறிக்கை கூறுகிறது.
அதனால் நாம் வாழ்வதே மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்ற தத்துவத்தை மக்களிடையே பரப்புமாறு ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.
பூட்டான் நாடு தனது நாட்டின் தேசிய வளர்ச்சியை விட தேசிய மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
எங்களுககு வருவாயை விட மகிழ்ச்சி தான் முக்கியம் என்று பூட்டான் மக்கள் சொல்கிறார்கள். உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தேசிய உற்பத்தி சதவீதததை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிற போது பூட்டான் 1970 லிருந்து தேசிய மகிழ்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பது பிரபலமான ஒரு செய்தியாகும்.  
Bhutan, a country which recognized the supremacy of national happiness over national income since the early 1970s and famously adopted the goal of Gross National Happiness over Gross National Product.
பூட்டான் நாட்டின் இந்த அக்கறைதான் ஐநா இப்படி ஒரு தீர்மாணததை நிறைவேற்ற காரணமாகும்.
ஒரு குட்டி நாட்டின் தீர்மாணம் வாழ்க்கையின் ஒரு அடிப்படை நோக்கம் பற்றி சிந்திக்கவும் அதற்காக பாடுபடவும் நாவை தூண்டியிருக்கிறது.
இதில் ஒரு அற்புதமான பாடம் இருக்கிறது.
நீங்கள் ஒரு சத்திய கோட்பாட்டில் உறுதியாக இருப்பீர்களானால்ஒரு கட்டத்தில் நீங்கள் தனியாக இருப்பதை போல உணர்ந்தாலும், இன்னொரு சந்தர்ப்பத்தில் உலகம் உங்களது பின்னால் வரும்.
பொருளாதார வளர்ச்சி , தொழில் துறை முன்னேற்றம்  வசதியான வாழ்க்கை என்ற வகையில் மட்டுமே உலகம் சிந்தித்துக் கொண்டிருக்கிற போது வாழ்க்கையின் அடிப்படையே மகிழ்ச்சி தான் என்பதை யோசிக்குமாறு செய்திருக்கிறது பூட்டான்.

0 comments:

Post a Comment